மூலிகைகள்
கேரட் பயன்கள்
கேரட் இயக்கையாகவே இனிப்பு சுவையுடையது. கேரட்டை பச்சையாகவே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. கேரட்டை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு கொழுப்பு தொல்லையும், ஆண்மை குறைவு பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல்வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.
விந்துமிகும் நீர்ப்பாண்டு வெங்கபமும் நீர்க்கட்டு
முந்துதுயர் மார்பு நோய் முக்குமலம் – தொந்தமிகு
கல்லடைப்பு நீங்கும் கவின் மஞ்சள் முள்ளங்கி
சொல்கேட்ட போழ்தத்தே சோர்ந்து
குணம்
கபரோகம், நீர்க்கடுப்பு, மார்புவலி, மலச்சிக்கல், கல்லடைப்பு முதலியவற்றை நீக்குவதன்றி அதிக தாது பலத்தைக்கொடுக்கும்.
கேரட் மருத்துவ பயன்கள்
- தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.
- கேரட் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
- வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
- எலுமிச்சை சாறுடன் கேரட் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.
- கேரட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்.
- கேரட்டை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு பொலிவை தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.
- கேரட்டை நன்றாக மென்று சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம், கிருமிகளை போக்குவதுடன் பற்களுக்கு வலிமையை தருகிறது.