குழந்தையின்மை..
ஆண்மலடேயன்றி பெண் மலடு இல்லையப்பா – என்று 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் கூறி உள்ளார்கள். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பெண் மலடுகள் தான் தற்போது அதிகமாக காணப்படுகிறது. காரணம் சரியான சத்துணவு இல்லாததுதான் எல்லா வேலைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை செய்து வருவதால் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாமல் போய் விடுகிறது.
சித்த வைத்திய நூல்களில் பெண் மலட்டுத்தன்மையை ஆதிமலடு, காகமலடு, கதலி மலடு, கர்ப்பமலடு என்று நான்கு வகைகளாக பிரித்துள்ளனர்.
ஒரு சில பெண்களுக்கு வயிற்றில் மூன்று மடிப்பு விழுந்து இடுப்பும் – உடம்பும் பெருத்து இருக்கும் இவர்களை ஜன்மலடு அல்லது ஆதிமலடு என்று சொல்வார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் உண்டாகலாம்.
சில பெண்களுக்கு முதலில் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு பிள்ளைகள் இல்லாமல் போய் விடும். இதை காக மலடு என்பார்கள்.
வாழை மரம் ஒரு தார் போட்ட பின்பு ஒன்றும் இல்லாமல் போய் விடுவதைபோல் ஒரு பிள்ளை பெற்ற பிறகு கர்ப்பம் தரிக்காது போய் விடுவதை கதலி மலடு என்றும் சொல்வார்கள்.
வயிற்றிலேயே செத்து விழும் குழந்தைகளை சாதாரணமாக வருடந்தோறும் பெற்றுக் கொண்டே இருந்தால் இதை கர்ப்ப மலடு என்றும் சொல்வார்கள்.
மேலும் பெண் மல்டடுத்தன்மை உண்டாவதற்கு ஈஸ்ட்ரோகன் மற்றும் புரொஜெஸ்ட்டிரான் என்ற ஹார்மோன்களின் குறைபாடுகளும் முக்கிய காரணமாகிறது. தைராய்டு பிரச்சனையினாலும் இது ஏற்படும். பெண்களுக்கு சிறுத்துப் போன வளர்ச்சி அடையாத கருப்பை – கொழுப்பு அடைத்த கருப்பை – கருப்பையில் கட்டிகள் – கருப்பையில் புண்கள் – கருக்குழாயில் அடைப்பு – கரு முட்டைகள் சரியாக வளர்ச்சி அடையாமை குறைந்த அளவு மாதவிடாய் – கருப்பையில் மல்டடுத் தன்மையை ஏற்படுத்தும் புழுக்கள், மேக வெட்டை, சூடு படுதல், பால் வினை நோய்களாலும் ஏற்படலாம்.
ஆண்களுக்கு தனது விந்தினில் முற்றிலும் விந்தணுக்கள் குறைவாக இருப்பது ஆண்குறி தளர்ந்திருத்தல், சரித பலம் இல்லாமை, மனத்தளர்ச்சி, பலகீனம், கவலை, பீடி, சீக்ரெட், பான்பராக், கஞ்சா, பிரவுன் சுகர், மாணிக்சந்த், சாராயம் போன்ற போதை பொருட்கள் சாப்பிடுவதாலும் நீரிழிவு (சர்க்கரை நோய்) விதை வீக்கம், பொண்ணுக்கு வீங்கி போன்றவைகளாலும் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை உண்டாகி குழந்தை இல்லாமல் போய் விடலாம்.
பெண்களுக்கான அனைத்து காரணங்களுக்காகவும் ஆண்களின் மலட்டுத் தன்மைக்கும் அற்புதமான சித்த மருத்துவ சிகிச்சைகள் பலனைத் தரும். ஆண்- பெண் குழந்தைகள் உண்டாக நசியமும்- சில வழிமுறைகளும் உண்டு.
இதற்கான சித்த மருத்துவ முறைக்கு தொடர்புகொள்ள :
[email protected]
[contact-form-7 id=”573″ title=”Contact form 1″]