குடற் பூச்சிகளை அழிக்கும் கல்யாண முருங்கை
அகன்ற இலைகளையும், செந்நிற விதைகளையும் முட்களைக் கொண்ட மென்மையான கட்டையினையும் உடைய மரம். முருங்க மரம் எனவும் வழங்கப் பெறும். தமிழகம் எங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கப்படுகிறது. இலை, பூ, விதை, பட்டை ஆகியவை மருத்துவப்பயனுடையது. முள்முருங்கை என்று மற்றொரு பெயர் இதற்கு உண்டு.
முள்ளு முருக்கதுதான மோதுகின்ற சர்த்திகுன்மிங்
கள்ளமறத் தீர்க்குங் கனற்சுரமும் – விள்ளவிரி
அக்கரமும் போக்கு மனல்வாய்வேக் காடகற்று
மிக்க வலிகொடுக்கும் விள்
குணம்
இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்ப்பால் பெருக்கி, மாதவிலக்கு தூண்டல் ஆகியவற்றுக்கு சிறந்ததாக விளங்குகிறது.
பூ கருப்பை குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றி சுர நீக்கியாகவும் , குடற் பூச்சி கொல்லியாகவும், விதை மலமிளக்கி குடற் பூச்சி கொல்லியாகவும் செயற்படும்.
மருத்துவ பயன்கள்
இதன் இலைச்சாறு 10 துளியில் 10 துளி வெந்நீர் கலந்து சாப்பிட வாந்தியாகி, வயிற்றுப் புளிப்பு, கபக் கட்டு, கோழை நீக்கி பசியும், செரிப்புத் திறனும் உண்டாகும். குடற்பூச்சி அகலும்.
கல்யாணமுருங்கை பட்டையை வெட்டி வெண்மையான உள் பாகத்தில் பசுவின் நெய்யைத் தடவி விளக்கெண்ணெய் தீபத்தின் பேரில் பிடிக்க புகை கப்பும். இதை சிறிது நெய்விட்டு குழைத்து கண்களுக்கு மை தீட்ட கண் சிவப்பு, நீர் முட்டாள் முதலியவை குணமாகும்.
கல்யாண முருங்கை சாற்றை காதில் 2-3 துளிவிட்டு பஞ்சு வைத்து அடைத்து வைக்க காது வலி நீங்கும். இந்த இலையை அரைத்துக் கட்டிகளுக்கு போட குணமாகும்.
இதன் இலைச்சாறு 30 மி.லி வெள்ளை வெங்காயச்சாறு 30 மி.லி அன்னக்கொதி நீருடன் காலை மட்டும் இளஞ்சூட்டில் கொள்ள நாள்பட்ட இரைப்பு, காசம் தீரும். புலால், புகை, போகம் விளக்குக.
சாறு 1 தேக்கரண்டி மோரில் கொள்ள நீர்த்தாரை அழற்சி, நீர் எரிச்சல் தீரும்.
இலைச்சாறு 30 மி.லி 10 நாட்கள் மட்டும் கொடுக்க மாதவிடாய்க்கு முன் பின் காணும் வயிற்று வலி நீங்கும்.