மூலிகைகள்
சுகப்பிரசவத்துக்கு உதவும் குங்குமப்பூ
குங்குமப்பூ மற்ற பூக்களுக்கு இல்லாத மதிப்பை பெற்றிருக்கிறது. உலகின் விலை மதிப்புமிக்க பூ இதுதான். ஸ்பெயின், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் பயிரப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீர் பகுதிகளில் பயிரப்படுகிறது. ஸ்ரீநகர் அருகில் இருக்கும் பாம்பர் பகுதிகளில் அதிகமாக பயிரப்படுகிறது. நம்நாட்டில் குங்குமப்பூ விளைவதற்கு ஏற்ற தப்பவெப்ப நிலை காஷ்மீரில் அமைந்து இருக்கின்றது.
வாடாமல்லி நிறத்தில் இருக்கும் பூக்களை நீக்கி விட்டு அதன் மகரந்தாள், சூல் தண்டு போன்றவையே குங்குமப்பூ ஆகும்.குங்குமப்பூ மருத்துவ குணம் மிகுந்த பூ என்பதினாலையே பாரம்பரிய மருத்துவ முறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
குங்குமப்பூ வைக்கண்டாற் கூறுகொண்ட பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம் – பொங்கு
மதுரதோ டந்தொலையு மாதர் கருப்ப
வுதிரதோ டன்களறு மோர்.
பயன்கள்
- குங்குமப்பூ சோர்வை நீக்கி செரிமானத்திற்கு உதவுகிறது.
- உடலுக்கு தேவையான தாதுப்பொருள்களை கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் இரத்த சிவப்பணு உற்பத்திக்கும் உதவுகிறது.
- அழகு சாதன பொருள்களிலும், உணவுகளிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
- நம்நாட்டில் குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுப்பது வழக்கம். இது சீதள சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் எளிதில் பிரசவமாக உதவுகிறது. பிறக்கும் குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கும்.
- சிறிதளவு குங்குமப்பூவை 3 அவுன்ஸ் சோம்பு பொடியில் கரைத்து கொடுக்க எளிதில் பிரசவமாகும்.
- தினமும் சிறிதளவு குங்குமப்பூவை வெற்றிலையில் வைத்து கொடுக்க பிரசவமான பெண்களுக்கு ஏற்படும் உதிர சிக்கலை நீக்குகிறது.
- குங்குமப்பூடன் விளாம்பிசின், பனை வெல்லம் சேர்த்து அரைத்து இரண்டு வட்டமான தாள்களில் தடவி கன்னங்களில் ஒட்டிவைக்க எந்தவிதமான தலைவலியும் நீங்கும்.