மூலிகைகள்
முதுகு வலியை குணமாக்கும் கவிழ் தும்பை
கவிழ் தும்பை தும்பையிலை வடிவில் சொரசொரப்பான வெளிரிய முழுமையான இலைகளையும் தனித்த வெளிர் நீல அல்லது வெளிர் சிவப்பு நிறமுடைய கவிழ்ந்து தொங்கும் மலர்களையும் உடைய சிறு செடி. தமிழகமெங்கும் தரிசுகளிலும் சாலையோரங்களிலும் ஆங்காங்கே தானே வளர்கிறது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது.
கவிழ் தும்பை பயன்கள்
- கவிழ்தும்பை இலை குருவையரிசி சமனளவு இடித்து மாவாக்கிப் பனைவெல்லம் கலந்து 10 கிராம் அளவாகக் காலை, மாலை 3 நாள் சாப்பிட பெரும்பாடு தீரும்.
- முதலில் அரைப்படி அளவு கருங்குருவை அரிசியை எடுத்து தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும். கவிழ்தும்பை இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஊற வைத்து அரிசியுடன் சேர்த்து இடித்து சலித்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பொடியுடன் கருப்பட்டி சேர்த்து மறுபடியும் இடித்து எலுமிச்சம் பழம் அளவு காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் வரை சாப்பிட்டு வர முதுகு வலியும், கூன் விழுந்த முதுகும் குணமடையும்.
- பாஷாண வகையில் உள்ள ரசத்தை கட்டுப்படுத்துவதில் மிக்க வல்லமை வாய்ந்தது இம் மூலிகை. இம் மூலிகையில் ” செம்புச்சத்து ” அதிகமாக உள்ளது.