கத்திரிக்காயின் மருத்துவ பயன்கள்
கத்திரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்திரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும் முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களில் விளைகிறது. கத்திரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புவர்களுக்கு ஏற்றது.
கத்திரிக்காய் பித்தங் கனன் றகபந் தீர்ந்துவிடுந்
தொத்து சொறிசிரங்கை தூண்டிவிடு – மெத்தவுந்தா
பிஞ்சான கத்திரிக்காய் பேசுமுத்தோஷம்போக்கு
மஞ்சார் குழலே வழுத்து
குணம்
கத்திரிக்காய் பித்தத்தால் வந்த கபத்தை நீக்கும். புடையையும் கிரந்தியையும் அதிகப்படுத்தும் கத்திரிக்காய் பிஞ்சானது திரிதோஷத்தை விலக்கும்.
மருத்துவ பயன்கள்
கொழுப்பு சத்து குறைந்தது கத்திரிக்காய், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கத்திரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 % நார்சத்து உள்ளது.
ரத்தத்தின் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும். நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கத்திரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாங்கனீசு நோய் எதிர்பொருள்களின் துணைக்காரணியாக செயல்படும். பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எதிர்பொருளாகவும் பயன்படுகிறது.
இளமை கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.
கத்திரிக்காயில் உள்ள ஆன்த்தோ சயானின் என்னும் வேதி பொருள் வயது முதிர்வதை தடுத்து இளமை தோற்றத்தை தருகிறது.