உடல் நலம்
கணைச் சூடு குணமாக
குழந்தைகளுக்கு வயிறு அடிக்கடி பெருத்தும், நெற்றியில் வியர்வையும், எப்போதும் அழுதுகொண்டே இருப்பார்கள் இது ஈரல் பாதிப்படைந்து வரும் கணைசூட்டு நோயால் வருவதாகும்.இதற்கு இயற்கை மூலிகைகளை கொண்டு தீர்வு காணும் வழிமுறைகளை பார்ப்போம்.
கணைச் சூடு குணமாக மருத்துவ முறைகள்
- 100 கிராம் செம்பருத்தி பூக்களை தண்ணீர்ல் போட்டு பிசைந்து வடிகட்டி – சிறிதளவு சர்க்கரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கணைச் சூட்டை குறைக்கும்.
- மணத்தக்காளி குழந்தை நோய்கள் பலவற்றைப் போக்குவதுடன் கணைசூடு, அஸ்திசுரம், இதனால் ஏற்படும் வறட்டு இருமல், குழந்தைகள் எலும்புந்தோலுமாக மெலிந்து இருப்பது முதலியவற்றையும் குணப்படுத்தும்.
- அரசவிதை, துளசி விதை சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக்கி காலை – மாலை பாலில் உரைத்துக் கொடுக்க கணைச் சூடு தீரும்.
- கஞ்சாங்கோரை இலையை அரைத்து சுண்டக்காய் அளவு தயிரில் கலந்து காலை, மாலை கொடுக்க கணைசூடு தீரும்.
- எலுமிச்சை இலைகளை மோரில் ஊறவைத்து மோரை உணவில் பயன்படுத்தி வர பித்த சூடு தணியும்.