பளபளப்பான மேனிக்கு கசகசா
கசகசா, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சை இலை, உருளைக்கிழங்கு முதலான வற்றை கலந்துதயாரிக்கப்பட்ட பவுடருடன் பாலைக்கலந்து முகத்தில் பூசி பின் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் முகம் கழுவவேண்டும். அப்படி செய்தல் முகத்தில் உள்ள சுருக்கங்கள், கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள், கண் இமையை சுற்றியுள்ள சுருக்கங்கள், கரு வளையம் மற்றும் நெற்றியில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
கிருமி நமைச்சல் கிரானியதி சாரஞ்
சிறநீர நித்திரைபோஞ் செப்பி – உருவழகுங்
காந்தியுமுன் டாகுங் கசகசா விண்குணத்தைத்
தேர்ந்தவர்க்கு விந்துவுமாந் தேர்.
தேங்காய்த் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் நெய் சேர்த்து உண்ண மலத்தைக் கட்டும். தாது பலம்மிகும்.
கசகசா, வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு சமனெடையாக இடித்துப் நெய், தேன் விட்டு லேகிய பதமாகப்பிசைந்து வைத்துக் கொண்டு 5 கிராம் காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வரக் கிராணி, அதிசாரம், விந்து இழப்புஇரத்த மூலம், சீதப்பேதி ஆகியவை தீரும்.
கசகசா, ஜாதிக்காய் இரண்டையும் அரைத்து பனங்கற்கண்டு பாகில் நெய், தேன் கலந்து லேகியம் செய்து சாப்பிடஉடல் சூடு குறையும்.