செரியாமை நீக்கும் ஓமம்
ஓமம் செடி சுமார் ஒரு மீட்டர் வரை வரளக்கூடியது. சிறகுகளை போன்று மெலிந்த இலைகளை கொண்டது. இது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும்.
சீதசுரங் காசஞ் செரியாமந் தம்பொருமல்
பேதியிரைச் சல்கடுப்புப் பேராம – மோ திருமற்
பல்லோடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோர்
சொல்லொடுபோ மோனெனச்சொல்
மருத்துவ பயன்கள்
ஓமம், கற்பூரம், கறிமஞ்சள் இம்மூன்றையும் தூள் செய்து வைத்துக்கொண்டு அதிக சீதளத்தினால் தேகம் குளிர்ச்சி பெற்றவர்களுக்கு மேலே தூவி தேய்க்க சூடுபிறக்கும்.
தூய்மையான ஓமத்தை வறுத்துப் பொடித்து 1 கிராம் அளவுக்கு நீருடன் கொள்ளப் பசியை மிகுக்கும். வயிற்று வாயுதீரும்.
ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப் போடக்குணமாகும்..
ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் ஆகியவற்றை சமனெடையாகச் சேர்த்து இளவறுப்பாய் வறுத்து இடித்துப் பொடித்து அத்துடன் சமன் சர்க்கரைப் பொடி கலந்து அரைத் தேக்கரண்டியாகத் காலை, மாலை கொடுத்துவர செரியாமை, கடும் வயிற்று போக்கு ஆகியவை குணமாகும்.
ஓமம், திப்பிலி, ஆடாதொடையிலை,கசகசாத்தோல் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி லி யாகக் காய்ச்சி வடித்து 15 மி லி யாக காலை, மாலை கொடுத்து வர இரைப்பிருமலில் நுரையீரலுள் தேங்கியுள்ள கபம் கரையும்.
ஓமத்தினால் குளிர்ச்சிசுரம், இருமல், அசீரணம், வயிற்றுப்பிசம், அதிசாரம், குடலிரைச்சல், ஆசனக்கடுப்பு, சீதபேதி, சுவாசகாசம் முதலியவை குணமாகும்.