மூலிகைகள்
குழந்தையின்மையை போக்கும் ஐவேலி மூலிகை
ஐவேலி மூலிகை கொடியினத்தை சார்ந்தது. இந்த மூலிகை குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு முக்கியமான மூலிகையாக ‘ பிரம்ம முனி வைத்திய காவியம் ‘ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
விந்திளைப்புப் பெண்மலடு வீக்க மகக்கிருமி
சந்து வலிப்புண்ணும் சார்க்கரப்பான் – வந்துடலில்
ஏக்கமுறச் செய்யுங்கால் ஏந்திழையே ஐவேலி
போக்கிவிடு மென்றே புகல்.
குணம்
ஐவேலியினால் தாது பலவீனம், மலடு, வீக்கம், வயிற்றிலுள்ள கிருமிகள், மேகவாய்வு, தசை பிடிப்பு, சிரங்கு, கரப்பான் முதலியவைகள் குணமாகும் என்க.
உபயோகிக்கும் முறை
ஐவேலிக்கொடியை காய் முதிர்ந்த நேரத்தில் நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக்கொண்டு ஒருவேளைக்கு 5 கிராம் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சில தினங்கள் சாப்பிட்டு வர விந்தணு குறைபாடு, பெண் மலடு, மேகவாய்வு, தசை பிடிப்பு, சிரங்கு, கரப்பான் ஆகிய அனைத்தும் நீங்கும்.