மூலிகைகள்
எண்ணற்ற மருத்துவ பலன்கொண்ட எள்
எள் உலகம் முழுவதும் உணவுப்பொருளாகவும் மருத்துப் பொருளாகவும் பயன்படுகிறது. சீனா, இந்தியா, பர்மா போன்ற ஆசிய நாடுகளில் அதிகமாக விளையும் பொருள்களில் எள்ளும் ஒன்றாகும்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துப்பொருள்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், நோய் எதிர்ப்பு சக்திகள் ஆகியவை எள்ளில் காணப்படுகிறது.
எள்ளில் ஆலியிக் அமிலம் என்ற கொழுப்பு அமிலம் சரிபாதி உள்ளது. இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல் கொழுப்பை ரத்தத்தில் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும்.
எள்ளுமருந் தைக்கெடுக்கு மேறனலாந் திண்மைதரு
முள்ளிலையைச் சேர்க்கு முதிரத்தைத் – தள்ளுமிரு
கண் ணுக்கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்
பண் ணுக் கிடர்புரியும் பார்
பயன்கள்
- மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு எள் உதவுகிறது.
- நரம்பு வியாதிகளை தடுக்கும் ஆற்றலை தருகிறது.
- ரத்த சிவப்பணு உற்பத்திக்கும், இதய செயற்பாட்டிற்க்கும் எள் உதவுகிறது.
- எள்ளை தண்ணீரில் ஊறவைத்து மறுநாளில் வடிகட்டி சர்க்கரை சேர்த்து 1-2 அவுன்ஸ் வீதம் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட உதிரச்சிக்கல் குணமடையும்.