முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க இயற்கை முறையில் தீர்வு
சிலருக்கு எவ்வளவுதான் முகம் கழுவினாலும் பவுடர் போட்டாலும் முகத்தில் எண்ணெய் பசை வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் வாரம் ஒருமுறை நீராவியை முகத்தில் படும்படி பத்து நிமிடம் வைத்திருந்து, குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.
பயன்படுத்தும் வழிமுறைகள்
- ஒரு முட்டையின் வெள்ளைக்கரு
- தேன் 1 தேக்கரண்டி
- எலுமிச்சம்பழம் 1
இவைகளை ஒன்றாகக்கலந்து முகத்தில் பூசி 1/2 மணிநேரம் வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவவேண்டும்.சிலநாட்கள் இப்படி செய்து வந்தால் எண்ணெய்ப் பசை மறையும்.
- பாசிப்பயிறு மாவு 1 தேக்கரண்டி
- கடலை மாவு 1 தேக்கரண்டி
- கர்போகரிசி 1/2 தேக்கரண்டி
இவைகளை ஒன்றாகக்கலந்து தினமும் சோப்புப் போடாமல் இப்பொடியை காலை மாலை முகம் கழுவி வர எண்ணெய்ப் பசை விலகி முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி நுண்ணிய பொடியாக்கிக் கொள்ளவும். முகத்தை ஈரமாக்கிக் கொண்டு அதன் மீது இப்பொடியை பூசி நன்கு உலந்ததும் கழுவி விடவேண்டும். எண்ணெய்ப்பசை முகத்தை விட்டு ஓடிவிடும்.
உணவு முறை
கீரை, தக்காளி, எலுமிச்சை, தயிர் போன்றவைகளை அதிகமாக உண்ண எண்ணெய்ப்பசை விலகும்.