ஊமத்தையின் மருத்துவ பயன்கள்
பற்களுள்ள அகன்ற இலைகளையும், வாயகன்று நீண்ட குழலுமான புனல் வடிவ மலர்களையும் முள் நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடிகள். மலர்கள் வெள்ளை, மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இவை வெள்ளை ஊமத்தை, பொன்னுமத்தை, கருஊமத்தை என பெயர் பெரும். செடியின் எல்லாப் பகுதிகளும் மருத்துவப் பயனுடையவை.
மருமருத்துவப் பயன்கள்
இலையை நல்லெண்ணையில் வதக்கிக் கட்ட வாத வலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலித்தல் ஆகியவை தீரும்.
இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து இளஞ்சூட்டில் காதில் விடச் சீதளத்தால் வந்த காதுவலி குணமாகும்.
இலைச்சாற்றை சமஅளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சிறிதளவு மயில்துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம், சதைவளரும் புண், புரைகள் குணமாகும்.
ஊமத்தை பிஞ்சை உமிழ் நீரில் மையாய் அரைத்து தடவ புழுவெட்டு குணமாகும்.
இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி தூள் செய்து ( ஒன்றிரண்டாய் ) பீடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா மூச்சுத் திணறல் உடனே குறையும்.