உணவே மருந்து
உளுந்து முட்டை குழம்பு

தேவையானவை
- முட்டை – 6
- கருப்பு உளுந்து – 100 கிராம்
- பொட்டுக்கடலை – 25 கிராம்
- தேங்காய் – சிறிதளவு
- வெங்காயம் – 2 பெரியது
- தக்காளி – 2
- மிளகாய்த்தூள்
- மல்லித்தூள்
- எண்ணெய்
- பட்டை
- கிராம்பு
- சோம்பு
- கறிவேப்பிலை
செய்முறை
உளுந்தை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து பொடியாக அரைத்து கொண்டு சிறிதளவு உப்பு சேர்த்து முட்டைகளை சேர்த்து நன்றாக கலந்து தோசை போல் ஊற்றி எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லிதூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தவுடன் உப்பு தேவையான அளவு சேர்த்து தேங்காயை அரைத்து ஊற்றவும். கொதித்தவுடன் முட்டை துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
பயன்கள்
- உழுந்தில் அதிகளவு ஊட்டச்சத்து உள்ளது அதனுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவதால் எலும்புகளும், நரம்புகளும் நல்ல பலம் பெறும்.
- உடல் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை நீக்குகிறது.
- பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி அடையும்.
- இடுப்பு எலும்பை வலுவாக்குகிறது. இது இளம் பெண்களுக்கு சிறந்த உணவாகும்.