மூலிகைகள்
இரைப்பை, குடலை சுத்தமாக்கும் உலர்ந்த திராட்சைப்பழம்
திராட்சையை உலர வைத்து பெறப்படும் உலர்திராட்சையில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளதால் தினமும் இதனை சிறிதளவு சாப்பிடலாம்.முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்களும், இரத்த சோகை உள்ளவர்களும் தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
காட்டி லுறுந்தேனிற் கண்டு பதமுறவே
கூட்டுந்தி ராட்சியது கொண்டார்க்கு – வாட்டுகின்ற
சிக்குமலத் தோடுபித்தம் சீறுமழ றனொழியும்
தொக்கு ளுதிரமிகுஞ் சொல்
குணம்
தேனில் பதமாக ஊரபோட்டுலர்த்திய திராச்சைப்பழத்தை உண்ணப் பழைய மலத்தை வெளியாக்கும். மேக அழலைத் தணிக்கும். உதிரப்பெருக்கை உண்டாக்கும்.
பயன்கள்
- 20 கிராம் உலர்திராட்சைப்பழத்தை தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து இறக்கி 20 நிமிடம் அப்படியே வைத்து பிறகு பிசைந்து வடிகட்டி சாப்பிட மலம் இளகும், இரைப்பையும், குடலும் சுத்தப்படும். தாது விருத்தியடையும், நுரையீரல் புண் ஆறும்.
- இதனை காடியிலரைத்து (வினிகர்) கொடுக்க காமாலை குணமாக்கும்.
- உலர்ச்சிராட்சைப்பழத்துடன் மிளகு சேர்த்து அரைத்து கொடுக்க கல்லடைப்பு, நீரொழுக்கு ஆகியவை தீரும்.
- இதனை அடிக்கடி சாப்பிட்டு வர நாவின் அரோசகம் (ஊணில் வெறுப்பு) நீங்கும் .
- உலர்திராட்சையை ஆட்டுகொழுப்போடு சேர்த்து அரைத்துப் பருக்களின் மீது போட உடைத்துக்கொள்ளும்.
- உலர்திராட்சைப்பழத்துடன் சீரகம், மொச்சைப்பருப்பு மாவு சேர்த்து அரைத்து வீக்கங்களுக்கு பற்று போட விரைவில் குணமாகும்.
- பெண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கால வலி நீங்கும். இரத்த சோகை நீங்கி நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.