உணவே மருந்து
உடலை வலுவாக்கும் உளுந்து களி செய்முறை
உளுந்து களி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற மிகவும் சத்தான உணவு. உளுந்து களி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
உளுந்தை நன்றாக வறுத்து ஆறியதும் அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் நாட்டு சர்க்கரையை போட்டு பதமாக காய்ச்சி அதில் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவைப்போட்டு நன்றாக கிளறவும். பிறகு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு பதமாக கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும். தினமும் காலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.
பயன்கள்
- உடல் சோர்வு நீங்கி உடல் வலுப்பெறும்.
- எலும்பு, நரம்புகள் உறுதி பெறும்.
- உடல் சூடு தணியும்.
- தாது விருத்தியாகும்.
- பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை கோளாறுகள் நீங்கும்.
- இடுப்பு வலி குணமாகும்.
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு சிறந்த உணவாகும். எலும்புகள் வலுப்பெறும்.