உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்
நமது உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்தால் ஆரோக்கியம் கெடுகிறது. உடல் அழகையும் கெடுக்கிறது. ஆனால் கொழுப்புச்சத்து இல்லாமல் நாம் வாழ முடியாது. புரதம் கார்போ ஹைட்ரேட் விட இரண்டு மடங்கு சக்தியை கொடுக்கிறது கொழுப்பு. இது இல்லாமல் உடல் இயங்கவும் முடியாது.
கொழுப்பில் இரண்டு வகை உண்டு.
1.நேரடி கொழுப்பு 2. மறைமுக கொழுப்பு
தாவர சமையல் எண்ணெய் – நெய் – வெண்ணெய் – போன்றவை நேரடிக் கொழுப்பு வகையைச் சேர்ந்தது. பால் – பால் பொருட்கள் – இறைச்சி – முட்டை மஞ்சள் கரு – இறால் ஆகியவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. பருப்பு வகைகள் – தானியங்களில் சிறிதளவு கொழுப்பு உள்ளது இது மறைமுக கொழுப்பு வகை அசைவ உணவுகள் எல்லாமே மறைமுக கொழுப்பு உள்ளவை தான்.
உணவுக்கு வாசனையும் சுவையும் உடலுக்கு சக்தியையும் கொழுப்பு அளிக்கிறது. கொழுப்பில் பேட்டி ஆசிட் என்ற எண்ணெய் உடலுக்கு கிடைக்கிறது. வைட்டமின்களை உடலுக்கு எடுத்து செல்லும் வேலையை கொழுப்பு செய்கிறது.
நமக்கு தினம் மொத்த கலோரியில் 30 சதவிகித கொழுப்புச் சத்து தேவைப்படுகிறது. அன்றாடம் 20 முதல் 50 கிராம் வரை நேரடிக் கொழுப்பை நாம் சாப்பிட வேண்டும் எளிமையான வேலை செய்பவர்களுக்கு 29 கிராம் நேரடிக் கொழுப்பும் – கடின வேலை செய்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 3 கிராம் – பாலூட்டும் பெண்களுக்கு 45 கிராம் குழந்தைகளுக்கு பருவ வயதினருக்கு 25 கிராம் கொழுப்பும் தேவைப்படுகிறது.
கொலஸ்ட்ரால் : இது இதயத்துக்கு நன்மை செய்யும் HDL மற்றும் தீமை செய்யும் LDL கொலஸ்ட்ரால் என் இருவகைகள் உண்டு. LDL இரத்தக் குழாய்களில் பாய்ந்து அடைப்பை ஏற்படுத்தி சிக்கலை உண்டாக்கும். HDL கொலஸ்ட்ரால் ஒரு சுத்திகரிப்பான் போல் செயல் படுகிறது.
கொழுப்பு மிகுந்த உணவுகளையும் சத்தற்ற உணவுகளையும் உண்டு உழைப்பு விளையாட்டு உடற்பயிற்சிகளற்ற வாழ்கை முறையில் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாக சேர்ந்து உடல் பருமன் ஏற்படுகிறது. இரத்த குறைவால் தசைகள் தளர்ச்சியடைந்து – உடல் பெருத்து விடுகிறது. எலும்புகள் எடை குறைந்து தடித்தவைகளாகி விடுகின்றன. உடலில் போதுமான இரத்தச் சுழற்சி இல்லாமையால் தான் ஊளைச்சதை ஏற்பட்டு உடல் பருமனாகி விடுகிறது.
உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள் கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து பொடி செய்து ஒரு டீஸ்பூண் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அத்துடன் ஒரு டீஸ்பூண் தேனும் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். இது ஒரு மாதம் சாப்பிட்ட பிறகு இம்மருந்தை நிறுத்தி விட்டு.
ஆமணக்கின் வேர் 250 கிராம் அளவு சேகரித்து காயவைத்து நன்றாக இடித்து தூள் செய்து தேன் விட்டு பிசைந்து 1 லிட்டர் தண்ணீர் விட்டு ஊற வைத்து ஒரு நாள் கழித்து வடிகட்டி அந்த நீரை அடுப்பில் வைத்து சிறு தீயாக எரிக்க அடியில் ஒருவகை உப்பு கிடைக்கும். இதை தினசரி புழுங்கல் அரிசி நொய்க் கஞ்சியில் சிறிது பெருங்காயம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் கொழுப்பு கரைந்து விடும்.
கொள்ளு 1/2 கிலோ சீரகம் 50 கிராம் இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து தூளாக்கி வைத்து கொண்டு 10 கிராம் அளவு காலை மதியம் இரவு மூன்று வேளை குடித்து வரவும்.