மூலிகைகள்
ஈச்சுர மூலி (பெருமருந்து) மருத்துவ பயன்கள்
நீண்ட மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் பச்சை வெள்ளை குழல் வடிவ மலர்களையும் கொண்ட ஏறு கொடி இனம். மிகவும் கசப்பு தன்மை உடையது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடியது. பெரு மருந்து, தலைச் சுருளி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இலை, வேர் மருத்துவ பயனுடையது.
பலபல வீக் கஞ்சந்தி பாதங்க ளோடு
நலமக்கல்வி ஷங்கள் நடுங்குங் – கலகலெனப்
பேச்சுரமுண் டாகுமலர்ப் பெண்ணனமே நீகேளா
ஈச்சுர மூலிதனக் கின்று
குணம்
விஷத்தை போக்கும் தன்மையுடையது, உதிரசிக்கலை நீக்கும். இரத்த சோகையை நீக்கும்.
ஈச்சுர மூலி மருத்துவ பயன்கள்
- ஈஸ்வரமூலி வேரை 40 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 8 இல் 1 பங்காக வற்றும்வரை காய்ச்சி 30 மிலி அளவு 2,3 வேளை கொடுக்க உத்திரசிக்கல் தீரும்.
- தேள் கடி விஷம் நீங்க கடித்த இடத்தில் ஈஸ்வர மூலி இலையை கசக்கி தேய்க்கலாம்.
- வேரை தேனில் உரைத்து 1 கிராம் உள்ளுக்கு கொடுத்து வர வெண்குட்டம், சோகை தீரும்.
- கால்நடைகளுக்கு ஏற்படும் அஜீரணக்கோளாறு, வயிறு தொடர்பான வியாதி, விஷகடிக்கு உகந்த மருந்து.