மூலிகைகள்
மூளை, இருதயத்திற்கு பலத்தை தரும் இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை இந்திய உணவுகளில் நறுமணத்திற்க்காக சேர்க்கப்படுகிறது. இது இலங்கையில் அதிகமாக விளைகிறது. இதன் மரத்தண்டின் பட்டைகளில் இருந்து எடுக்க படுகிறது. இலவங்கப்பட்டை நறுமணதிக்காக உணவுகளில் சேர்க்கப்பட்டாலும் அதில் உள்ள மருத்துவ நன்மைகளும் நம் உடலுக்கு கிடைக்கிறது.
தாதுநட்டம் பேதி சருவவிட மாசியநோய்
பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ் – சாதிவிட
மாட்டுமிறைப் போடிரும லாதியநோய்க் கூட்டமற
வோட்டு மிலங்கத் தரி.
குணம்
இலவங்கப்பட்டையானது விந்து நஷ்டம், அதிசாரம், வாதம், சிலந்தி விஷம், பாம்பு விஷம் முதலிய நோய்களை நீக்கும்.
இலவங்கப்பட்டை பயன்கள்
- இலவங்கப்பட்டையை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட மூளை, இருதயம் முதலிய உறுப்புகளுக்கு பலத்தைக்கொடுக்கும்.
- எளிதில் சீரணமாகாத உணவுகளால் ஏற்படும் குடல்புண், வாயுத்தொல்லை, மூலம் போன்ற நோய்களை குணமாக்குகிறது.
- இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் கலந்து சாப்பிட சந்தி, நடுக்கம், கண் துடிப்பு ஆகியவை குணமாகும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது தடைபட்டுள்ள உதிரத்தை விரைவில் வெளியேற்றும்.
- பல் பொடியுடன் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து உபயோகிக்க வாய் நாற்றம், பல் வலி, ஈறுகளில் இரத்தம் வருதல் ஆகியவை நீங்கும்.