இரத்த சோகையும் அதற்கான மருத்துவமும்
இரத்த சோகை என்றால் என்ன
இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோகுளோபீனின் அளவோ எப்போதும் இருப்பதை விட குறைந்திருக்கும் நிலை இரத்தச் சோகை நோய் என்று அழைக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் என்பது, திசுக்களுக்கு ஒக்சிஜனைக் கொண்டுசெல்லும், இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள (RBC) இரும்புச் சத்து நிறைந்த புரதமாகும்.
இரத்தச் சோகையினால் ஏற்படுகின்ற பிரச்சினைகள்
- உடல் அலுப்பாக இருத்தல் (Lassitude)
- களைப்பாக இருத்தல் (Exertion)
- மூச்செடுக்கக் கஷ்டமாக இருத்தல் (Breathlessness)
- நெஞ்சு ( இருதயம் ) படபடத்தல் (Palpitations)
- காதுக்குள் இறைதல் (Tinnitus)
- கண்கள் மங்கலாகத் தெரிதல்
- கண்களில் பார்வை குன்றுதல் (Dimness of vision)
- கைவிரல்களில் சுள் என்று வலித்தல் (Paraesthesia in fingers)
- நித்திரை குறைதல் (Insomania)
- தலைச்சுற்றல் ஏற்படுதல் (Dizzeness)
- நெஞ்சில் வலி ஏற்படுதல் (Angina)
- கால் விரல்களில் வலி ஏற்படுதல் (Paraesthesia in toes)
- தலை வெடிப்பது போலிருத்தல் (Throbbing in Head)
இரத்தச்சோகை ஏற்படுவதற்குரிய காரணங்கள்
- குழந்தைகளில் வயிற்றில் பூச்சி (Worms) இருப்பது ஓர் அடிப்படைக் காரணம்.
- வயது வந்த பெண்களில் மாதவிடாய் அடிக்கடியம் அல்லது மாதவிடாயின்போது மேலதிகமாக இரத்தப்பெருக்கு ஏற்படுத்தலும் ஒரு முக்கியமான காரணமாகும்.
- இருதயத்தில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் இரத்தச்சோகை ஏற்படும்.
- கைகளில் கால்களில் நிறைய புண்கள் உள்ளவர்களுக்கும் இரத்தச்சோகை ஏற்படும்.
- இரத்தச்சோகை ஏற்படுவதுக்கு மலேரியாக் காய்ச்சலும் ஒரு முக்கிய காரணமாகும்.
- குறிப்பாக நாள்தோறும் ஒரு கீரைவகை என்று உணவில் சேர்த்து உண்ணா விட்டாலும் இரத்தச்சோகை ஏற்படும்.
தவிர்ப்பதற்குரிய வழிமுறைகள்
- நாள்தோறும் ஒரு கீரை என அகத்தி இலை, முருங்கை இலை, சண்டியிலை, தவசி முருங்கை, முளைக்கீரை, பொன்னாங்காணி, வல்லாரை என சமையல் செய்து தவறாமல் உன்ன வேண்டும்.
- சிறிய மீன் வகைகளும், பாலும் சிறந்தது.
- குழந்தைகளுக்கு கட்டாயமாகத் தாய்ப்பாலூட்டி வளர்க்க வேண்டும்.
சித்த மருத்துவம்
கீழா நெல்லியுடன் சம அளவு சரிசலாங்கண்ணி சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு பசும் பாலுடன் 1 மண்டலம் சாப்பிட்டு வர சோகை குணமாகும்.
பூவரசம் பட்டையை மேல் தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து சூரணம் செய்து தினசரி 2 வேளை வெந்நீரில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர சோகை குணமாகும்.
மூக்கிரட்டை வேர் 10 கிராம் அருகம்புல் 10 கிராம் கீழாநெல்லி 10 கிராம் மிளகு 5 கிராம் அனைத்தையும் சேர்த்து அரைத்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கல் லிட்டராக காய்ச்சி தினசரி 3 வேளை சாப்பிடலாம்.
கரிசலாங்கண்ணி 10 இலை, வேப்பிலை 10 இலை, துளசிஇலை 10 பரித்து கீழாநெல்லிச் செடியுடன் வெறும் வயிற்றில் மென்று தின்று வர சோகை குணமாகும்.
மஞ்சளை சிறு துண்டுகளாக நறுக்கி சுண்ணாம்புத் தெளிவு நீரை ஊற வைத்து மறுநாள் வெந்நீரில் கழுவி விட்டு காயவைத்து இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு 1 தேக்கரண்டி அளவு பால் அல்லது தேனில் சாப்பிட்டு வர சோகை குணமாகும்.
காட்டாமணக்கு வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு 1 தேக்கரண்டி அளவு பசுவின் பாலில் கலக்கி சாப்பிட்டு வர சோகை குணமாகும்.