உணவே மருந்து
இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சட்னி
செய்முறை
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சம அளவு எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து வைத்து கொள்ளவேண்டும். இஞ்சி, பூண்டு தேவையான அளவுக்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவேண்டும். இவைகள் அனைத்தும் சட்டியில் போட்டு சூடாக வதக்க வேண்டும். பிறகு சிறிது புளியும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
காலை இட்லி, மற்றும் தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவைகளுக்கு துவையலாக பயன்படுத்தலாம்.
மருத்துவ பயன்கள்
- நல்ல பசியை தூண்டும்.
- நெஞ்சுகரிப்பு, புளியேப்பம் உள்ளவர்களுக்கு சிறந்தது.
- எலும்புக்கு சக்தியை கொடுக்கும்.
- இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
- மூட்டு வலிகளுக்கும், நரம்பு வலிகளுக்கும் சிறந்தது.
- நாட்பட்ட மலச்சிக்கலுக்கு சிறந்த உணவு.