தேவையான பொருள்கள்
1.மருதாணி இலை
2.நல்லெண்ணெய்
3.பசுவின் பால்
செய்முறை
மருதாணி இலையைக் காம்பு இல்லாமல் ஆய்ந்து எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து சிறு சிறு வில்லைகளாக தட்டவேண்டும்.
தட்டிய மருதாணி வில்லைகளை, நல்லெண்ணையில் போட்டு நான்கு நாட்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும். வெயிலில் ஒருநாள் புடம் வைக்கவேண்டும். பிறகு அடுப்பிலேற்றி, அந்த நல்லெண்ணையை சிறு தீயில் காய்ச்ச வேண்டும். காய்ச்சும் அளவிலே, மருதாணி வில்லைகள் முறுகளாகி சிவந்து விடும். இந்த பதத்தில் இறக்கி ஆறவைத்து பயன் படுத்தவும்.
குணங்கள்
இந்த கூந்தல் வளர் தைலத்தை தினந்தோறும் கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் தாழம் விழுது போல் நன்றாக நீண்டு வளரும். இது முடி உதிர்தல், வெளுத்தல் முதலியவற்றுக்கு சிறந்த மூலிகை எண்ணெயாகும்.