ஆண்மை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அமுக்கிரா
மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறுகிளைகளையும் உடைய ஐந்து அடிவரை வளரக்கூடிய குறஞ்செடிவகை, தென்மாவட்டங்களில் சில இடங்களில் தானே வளரக்கூடியது. கிழங்கே மருத்துவப் பயனுடையது.ஏற்றுமதிப் பொருளாக பயிர் செய்யப்படுகிறது. உலர்ந்த கிழங்குகள் மருந்துக்கடைகளில் கிடைக்கும். இக்கிழங்கு ஆயுர்வேதத்தில் அசுவகந்தி என்றழைக்கப்படுகிறது.
கொஞ்சத் துவர்ப்பாங் கொடியகஞ் சுலையறி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு – விஞ்சி
முகவுறு தோடமும்போ மோகம் அன லுண்டாம்
அசுவகந் திக்கென் றறி
நோய்நீக்கி உடல் தேற்றியாகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாதுவெப்ப அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
மருத்துவப் பயன்கள்
வேர்ச்சூரணம் 5 கிராம் தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட சளி கரைந்து (நிமோனியா) கபவாதச் சுரம் குணமாகும்.
சூரணத்தைப் பாலில் கலந்து பூச வீக்கம், படுக்கைப்புண் ஆகியவை குணமாகும்.
அமுக்கரா சூரணம் 10 கிராம், கசகசா 30 கிராம், பாதாம் பருப்பு,10 கிராம், சாரப்பருப்பு 5 கிராம், பிஸ்தா பருப்பு 5 கிராம் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாள்கள் சாப்பிட இழந்த இளமையைப் பெறலாம்.
அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.
காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி நடப்பான் என சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு சித்த மருத்துவத்துவத்தில் எண்ணற்ற பலன்கள் அடங்கி உள்ளது.