அறுசுவை உணவும் உடல் ஆரோக்கியமும்
நம் உடல் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு, காரம், உப்பு இந்த ஆறு சுவைகளே மனித உயிரியின் ஆரோக்கியத்தை நிலை நாட்டுகிறது. இந்த ஆறு சுவைகளே ஆங்கில மருத்துவத்தில் A,B,C,D,E,K என்ற ஆறு வைட்டமின்களாக குறிப்பிடுகிறது.
அறு சுவை உணவை அளவோடு உண்போரை
பெருஞ்சுமைப்பிணிகள் நெருங்குவதில்லை
இனிப்பு
வாழை கரும்பு வெல்லம் சர்க்கரை பூசணிக்காய்
பயன்: தசை வளர்ச்சி
குறைந்தால் வரும் நோய்கள் :
உடல் மெலிவு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை
அதிகமானால் வரும் நோய்கள் :
உடலில் கட்டி வருதல், உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவை
புளிப்பு
அரிசிசோறு, தயிர், மோர், பருப்பு, அவரைக்காய், பீன்ஸ், பசலைக்கீரை, ஆரஞ்சு, எலுமிச்சை, கடலை எண்ணெய்
பயன்: கொழுப்பு சத்து
குறைந்தால் வரும் நோய்கள் :
வாந்தி, தூக்கம் குறைதல், சோர்வு, அடிக்கடி மலம் கழித்தல் போன்றவை
அதிகமானால் வரும் நோய்கள்
: மலச்சிக்கல், சோம்பல், அதிக தூக்கம், வாத நோய் முதலியவை
கசப்பு
சுண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, கடுகு, துளசி, ஓமம், கசகச, கம்பு, தினை, சோம்பு, சீரகம், வெந்தயம், பூண்டு, எள்.
பயன்: நரம்புகள் பராமரித்தல்
குறைந்தால் வரும் நோய்கள் :
சோம்பல், நரம்பு தளர்ச்சி, அசீரணம், உடலில் பலம் குறைதல் போன்றவை
அதிகமானால் வரும் நோய்கள் :
சொறி சிரங்கு, தூக்கமின்மை போன்றவை
காரம்
மிளகாய், அறுகீரை, சிறுகீரை, கருணைக்கிழங்கு, மிளகு, இஞ்சி, சுக்கு.
பயன்: உமிழ்நீர் சுரத்தல், ஜீரணித்தல்
குறைந்தால் வரும் நோய்கள் :
நாவரட்சி, மலச்சிக்கல் போன்றவை
அதிகமானால் வரும் நோய்கள் :
நீர்ச்சுருக்கு, சீதா பேதி போன்றவை
துவர்ப்பு
வாழைப்பூ, அத்திக்காய், மாம்பிஞ்சு, பீட்ரூட், கடுக்காய், நெல்லிக்காய், விளாம்பழம்.
பயன்: இரதம் உற்பத்தி
குறைந்தால் வரும் நோய்கள் :
இரத்த சோகை, உடல் வெளுத்தல், கால்கள் வீக்கம்
அதிகமானால் வரும் நோய்கள் :
தூக்கமிமை, திமிர்வாதம், கால் குடைச்சல் போன்றவை
உப்பு
வாழைத்தண்டு, சௌ சௌ, வெள்ளை பூசணிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், வெங்காயம், மணத்தக்காளிக்கீரை.
பயன்: எலும்புகளை பராமரிக்க
குறைந்தால் வரும் நோய்கள் :
பசியின்மை, புளியேப்பம், நெஞ்செரிச்சல், வயிற்று நோய், எலுமிப்புகள் வலிமை இழப்பு போன்றவை
அதிகமானால் வரும் நோய்கள் :
வாந்தி, பேதி, காய்ச்சல், அதிகமான சிறுநீர் கழித்தல்ப