மூலிகைகள்
அரிவாள்மனைப் பூண்டு
அரிவாள்மனைப் பூண்டு கூர்நுனிப்பற்கள் கொண்ட கூர்மையான வடிவ இலைகளை உடைய மிகக் குறுஞ்செடியினம். மழைக்காலங்களில் தமிழகமெங்கும் தானே வளரக்கூடியது. இதன் இலையே மருத்துவ பயனுடையது. இது இரத்த கசிவை தடுக்கும் மருந்தாக செயற்படும். அரிவாள் மூக்கு பச்சிலை என்றும் அழைக்கப்படுகிறது.
வெட்டுக்கா யத்தை விரைவி லுலர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுந் தோன் றிமிக்க – கெட்ட
பரிவாற் றலையைப் பிளக்கும்வலி நீக்கு
மறிவாள்மூக் குப்பச்சி லை
குணம்
ஆயுதத்தால் உண்டாகிற காயத்தை மிக விரைவில் ஆற்றும் மேலும் மகா விஷத்தையும் நீக்கும்
பயன்கள்
- அரிவாள்மனை பூண்டு இலையை கசக்கி வெட்டுக்காயங்களில் சாறை பிழிய இரத்த பெருக்கு நிற்கும்.
- அரிவாள்மனை பூண்டு இலையுடன் குப்பைமேனி இலை, பூண்டுப்பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து காயத்தில் கட்ட நஞ்சு முறியும். விரைவில் காயம் ஆறும்.
- இதன் பொடி நரம்பு தளர்ச்சியை குணமாக்கும். ஆண், பெண் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தும். தகாத உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளை குணப்படுத்தும்.
- அரிவாள்மனைப் பூண்டு, குப்பை மேனி இலை சேர்த்து அரைத்து படர்தாமரை இருக்கும் இடத்தில் பற்று போட குணமாகும்.
- அரிவாள்மனைப் பூண்டு, கிணற்று பாசன இலை இரண்டையும் சரி சமமாக எடுத்து அரைத்து புழுவெட்டு இடத்தில் தடவி வர புழுவெட்டு குணமாகும்.