மூலிகைகள்

முந்திரிப்பருப்பின் மருத்துவ பயன்கள்

முந்திரிப்பருப்பு அதிக ஆற்றல் உடையது. இதை பச்சையாகவும் வறுத்தும் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். நோய் எதிர்ப்பாற்றலை தரக்கூடியது. ஆண்மை குறைவை நீக்கும் ஆற்றல் உடையது.

மெத்த வினிப்பாகு மென்கொடியே தின்றக்காற்
பித்த வனிலம் பிறக்குங்காண் – சத்தியமா
யிந்திரியப் புஷ்டி யிளைக்காது மாந்தமுண்டா
முந்திரியி னற்பருப்பான் முன

குணம்

மிகுந்த உருசியுள்ள முந்திரிப் பருப்பைத் தின்றால் பித்தவாதத்தை உண்டாக்கும், தாது விருத்தி , அக்கினி மந்தம் ஆகிய இவைகள் உண்டாம் என்க.

பயன்கள்

  • முந்திரிப்பருப்பை சிறிது வறுத்துக் கற்கண்டு கூட்டி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும்.
  • இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
  • முந்திரிப்பருப்பு இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொழுப்பைத் தருகிறது.
  • இது சிறிது பித்தத்தையும், வாயுவையும் உண்டாக்கும், அக்கினியைக் குறைத்து ஜீரணசக்தியை மந்தமாக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!