உடல் நலம்
மாதவிடாய் வலி நீங்க
மாதவிடாய் கோளாறுகளில் பலவகைகள் உண்டு. திருமணத்திற்கு முன் சில பெண்களுக்கு மாதவிடாயின் போது தாங்கமுடியாத வலி ஏற்படுவதுண்டு. அதற்கு அவர்களின் ஜனனேந்திரியம் சரியாக வளராத நிலையே காரணம் எனலாம்.
குறிப்பாக கருப்பையில் இரத்தம் வெளியேறும் போது வலி அதிகமாக இருக்கும். மாதவிடாய் வலி நீங்க சில எளிய வழிமுறைகளை நாம் காண்போம்.
மாதவிடாய் வலி நீங்க எளிய வழிமுறைகள்
- இலவங்கப்பொடி 2 கிராம் அளவு எடுத்து பனைவெல்லத்துடன் சேர்த்து மாதவிடாய் ஏற்படும் காலங்களில் சாப்பிட வலி நீங்கும்.
- உலர்திராட்சை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி நீக்குவதுடன் நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.
- சிறுகுறிஞ்சா இலை 10 கிராம், களா இலை 20 கிராம் இரண்டையும் மைபோல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட மாதவிடாய் வலி நீங்கும்.
- மாதவிடாய் சரிவர வெளிப்படாமல் வயிற்றுவலி இருந்தால் அடிவயிற்றில் ஆமணக்கு எண்ணையை தடவி அதன் மீது ஆமணக்கு இலையை வதக்கி தாங்கக்கூடிய சூட்டில் வைத்து எடுக்க மாதவிடாய் வலியை போக்கும்.
- கல்யாண முருங்கை இலையை சாறு எடுத்து 30 மி.லி அளவு 10 நாட்களுக்கு மட்டும் சாப்பிட மாதவிடாய்க்கு முன் பின் காணும் வயிற்று வலி நீங்கும்.
- கீழா நெல்லி வேர், அசோகப் பட்டை, அத்திப்பட்டை மூன்றையும் இடித்து தூள் செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் கலந்து காலை – மாலை சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறு அனைத்தும் தீரும்.