சித்த மருத்துவம்தைலம்
நொச்சித் தைலம்
நொச்சி தைலம் கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி, நீண்ட நாள் தலைவலி ஆகியவற்றை நீக்கும்.
தேவையான மூலிகைகள்
- நொச்சிக் கொழுந்து – 40 கிராம்
- பூ நாகம் – 40 கிராம்
- மிளகு – 20 கிராம்
- நல்லெண்ணெய் – 300 மி. லி
- பசும்பால்– சிறிதளவு
செய்முறை
நொச்சிக் கொழுந்து, பூ நாகம், மிளகு இவற்றைப் பசும்பாலில் அரைத்து நல்லெண்ணையில் கலந்து மெழுகு பதமாகக் காய்ச்சி 4 நாள்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர நீண்ட நாள் தலைவலி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி முதலியன தீரும்.
குறிப்பு
தைலம் தேய்த்து குளித்த அன்று புளி சேர்க்காமல் உணவு உட்கொள்ளவேண்டும். பகல் தூக்கம், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.