நீரிழிவு நோயும் அதற்கான தீர்வும்
சர்க்கரை வியாதிக்கு சித்த மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதிமூத்திரம், மது மேகம், நீரிழிவு என்று பெயர்கள் சூட்டி உள்ளனர். ஆனால் பதினேழாம் நூற்றாண்டின் கடைசியில்தான் சிறுநீரில் சர்க்கரை இருந்தால் Diabetes Mellitus என்று கண்டுபிடித்து நவீன மருத்துவம் பெயர் சூட்டியது.
நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதியானது மருத்துவ உலகில் நினைவுக்கு எட்டாத நாளிலிருந்து அறியப்பட்டு வந்துள்ளது. தற்காலத்தில் அதிகமாக காணப்படுகிறது.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரித்து இருப்பது இதனுடைய தன்மையாகும்.
சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் அதாவது சர்கரைச் சத்து வெளியேறவும் செய்கிறது. இன்சுலின் சுரப்பி குறைவாக இருப்பதால் இந்நிலை உண்டாகிறது.
நீரிழிவை குறிக்கும் டயாபிட்டிஸ் என்னும் சொல் ‘டு சிப் போன்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது இதற்கு ஊடே கடந்து செல்லுதல் என்று பொருள்.மிலிட்டஸ் என்னும் சொல்லுக்கு தேன் என்று பொருள். இந்த இரு தன்மைகளும் இந்நோயின் அறிகுறிகள். ஏராளமான சிறுநீரும் அதில் சர்கரைவும் வெளியேறுதலுக்கு இந்தப் பெயர் வந்தது.
நம் உடலில் உள்ள இரத்தத்தில் 5 கிராம் சர்க்கரை எப்போதும் உண்டு நீரிழிவு நோயாளிகள் பால் மற்றும் காய்கறி உணவுவகைகளை உண்டு வர வேண்டும். கொழுப்பு குறைவாகவும் தரமான இயற்க்கை உணவுகள் மிகுந்தும் இருக்க வேண்டும். பழங்கள் கொட்டைவகைகள் காய்கறிகள் தனியாவகைகள் போன்றவைகள் சாப்பிடுவது நல்லது.
மருத்துவம்
மருதம்பட்டை, நாவல்பட்டை ஆலம் விழுது இவை வகைக்கு 50 கிராம் எடுத்துத் தட்டி 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டைக் காய்ச்சி வடித்துப் பதியைக் காலையிலும் மீதியை மாலையிலும் குடிக்கவும் – நீரிழிவு நோயின் குறிகள் தீரும்வரை குடித்து வரவும்.
கீழா நெல்லி சமூலம் 50 கிராம் மிளகு 25 கிராம். 1 லிட்டர் தண்ணீரில் தட்டிப் போட்டு 100 மிலி ஆக சுண்ட வைத்துக் கொண்டு 10 மிளகாய்த் தூள் செய்து போட்டு 1/2 அவுன்ஸ் வீதம் காலை – மாலை கிடித்துவர 3 வாரங்களில் நீரிழிவு நீங்கிவிடும்.
ஏலக்காய், கிராம்பு, ஆவாரம்பட்டை, ஆவாரம்பூ, சீந்தில் கிழங்கு, தாமரைவளையம், இலவங்கப்பத்திரி ஆவரம்வேர், ஆவாரம் இலை, ஆவரங்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு இவைகளைச் சமமாகக் கொண்டு மோர்விட்டரைத்து உருட்டி நெய்யுடன் கலந்து உட்கொள்ள மேகம், நீரிழிவு முதலானது தீரும்.
வேப்பம்பிசினை நெய்யில் உலர்தித் தூள் செய்து கொண்டு சமையரிசியையும் தூள் செய்து இவ்விரண்டையும் நெல்லிக்காய் அளவு தூளை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர இந்நோய் தீரும். இம்மருந்து மிகவும் கைக்கண்டது.