நலமான வாழ்வுக்கு 7 முக்கியமான மூலிகைகள்
அருகம்புல்
அருகம்புல்லை வாரம் ஒரு முறை வேகவைத்து கசாயம் தயாரித்து குடித்து வந்தால் வலியும் வியாதியுமின்றி வாழலாம்.
அத்தியிலை
அத்தி இலைகளை தினமும் தின்று வந்ததால் உடலில் பாய்ந்தோடும் இரத்தம் சுத்தமடைந்து உடல் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் நீடுழி வாழலாம்.
அகத்திக்கீரை
தூய்மையான ‘அகம்’ பெற அகத்திக்கீரையை உணவோடு அவ்வப்போது கலந்துண்டு வரவேண்டும்.
வில்வம்
தக்க உடல் உழைப்பிற்கு பிறகு வில்வ இலைகளை அவ்வப்போது நான்கைந்து மென்று விழுங்கி, உணவையும் உட்கொண்டு வந்தால் நல்ல முறையில் செரிமாணமடைந்து உணவின் முழு சக்தியையும் உடல் பெறும். உடலில் இருக்கும் விஷத்தன்மையும் நீக்கும்.
வேப்பிலை
வேப்பிலை அவ்வப்போது சிறிது அருந்தி வந்தால் உடலிலுள்ள நோய்க்கிருமிகள் அழிவதுடன், கிருமிகள் உற்பத்தியாகாமலும் அன்றாட உடலுறுப்பு தேய்மானகள் அன்றாடம் புதுப்பிக்கப்படும் இறுதிவரை முழு சக்தியுடன் நோயின்றி வாழ்ந்திடலாம்.
மாவிலை
மாமரத்து இலைகளை வேகவைத்து வடிகட்டி கசாயமாக குடித்து வந்தால் நம் உடலில் நீரினால் உண்டாகும் வியாதிகளை நீக்கும்.
துளசி
துளசி இலையை அவ்வப்போது மென்று தின்று வந்தால் நமது உடலில் எலும்பும் தசையும் உறுதியடைந்து பலத்தை பெறும்.