திரிகடுகு சூரணம்
சுக்கு மிளகு அரிசிதிப்பிலி ஆகியவைகளே திரிகடுகு சூரணம் எனப்படுகிறது.
தவறிப்போம் திரிகடுகு சூர ணத்தால்
தருவான மந்தமுடங்க ழிச்சல் தீரும்
தவறிப்போந் தேனிலே கொண்டா யானால்
தருகாது சந்நிசீத ளங்கள் தானுந்
தவறிப்போம் பனைவெல்லங்கூட் டியே யுண்ண
தன்மையுள்ள வயிற்றுநோய் தானே தீருந்
தவறிப்போஞ் சகலநோய தனைக் கண்டால்
தருகாது வைத்தியன்பேர் சொல்லு முன்னே.
திரிகடுகு சூரணம் செய்முறை
சுக்கை எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்து பிறகு வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அரிசி திப்பிலி, மிளகு சேர்த்து இடித்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
அளவு
பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன் அளவு, சிறியவர்களுக்கு 1/2 ஸ்பூன் அளவு
திரிகடுகு சூரணம் பயன்கள்
திரிகடுகு சூரணம் கொஞ்சம் எடுத்து பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும். வெந்நீரில் சிறிதளவு பவுடரை போட்டு கலக்கி குடிக்க வயிற்று பொருமல், வயிற்று இரைச்சல் குணமாகும். இருமல் இருதய நோய் குணமாகும். நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
தேனில் சிறிதளவு குழைத்து சாப்பிட வாயு – அஜீரணம்- ஏப்பம் குணமாகும், பசியை தூண்டும்.வாந்தி பேதியை குணமாக்கும்.
தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட இருமல் தொண்டைக்கம்மல் வீக்கம் குணமாகும். தாது நஷ்டம் அக்கினி மந்தம் சரியாகும். இரைப்பைக்கும் ஈரலுக்கு பலத்தைக் கொடுக்கும். தேனில் சிறிதளவு கலந்து தினசரி 3 வேளை சாப்பிட ஜலதோஷம், இருமல் போன்றவை குணமாகும்.
Buy Online : http://naturekart.in/product/thirikadugu-sooranam/