உணவே மருந்து
கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்
புளிச்சகீரை
- குழந்தைகளுக்கு முக்கியமான உணவு.
- இரத்தம் குறைவாக உள்ளவர்கள் மற்றும் சத்துக் குறைவானவர்கள் சாப்பிடலாம்.
- ஆண்மை பெண்மை பெருகும்.
- மலச்சிக்கலுக்கு சிறந்த உணவு.
- மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
வல்லாரை
- குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.
- வாத நோயாளிகளுக்கு கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவு.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது.
- மன அழுத்தம் உள்ளவர் ஒரு வேளையாவது சாப்பிட வேண்டும்.
- இரத்த ஓட்டத்திற்கும் நரம்பு மண்டலத்திற்கும் சிறந்தது.
முருங்கை கீரை
- கீரையை உணவாகக் கொள்ளக் கபம், பித்த மயக்கம், கண் நோய், செரியா மந்தம் தீரும்.
- இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டு வலி, வாத வலி, இடுப்பு வலி ஆகியவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
- முருங்கை பூவை பருப்புடன் சமைத்துண்ணக் கண் எரிச்சல், வாய்நீர் ஊறுதல், வாயிக் கசப்பு மாறும்.
- காயை அளவுடன் சாப்பிட மார்புசளி, கபம் தீரும்.
- இலையை பொறியலில் நெய்யுடன் சாப்பாட்டுக்குத் தொடக்கத்தில் 40 நாள்கள் சாப்பிட வாலிப மிடுக்கும் வீரியமும் உண்டாகும்.
- மலச்சிக்கலை போக்கும்.
பொன்னாங்கண்ணி கீரை
- ஒரு பிடி பொன்னாங்கண்ணி இலைகளை அதிகாலையில் மென்று தின்று பால் அருந்தி வர உடல் குளிச்சியுற்றுக் கண்நோய் பலவும் நீங்கும். பார்வைத் தெளிவுறும்.
- இதனை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பொன்போல் ஆகும் என்பதாலேயே ( பொன் + ஆம்+ காண் + நீ ) பொன்னாங்கண்ணி என்ற பெயர் வந்தது.
சிறு கீரை
- இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது செங்குத்தாக வளரும். நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய தோற்றமுடையது.
- கீரையாகச் சமைத்து உண்டு வரச் சிறுநீர் பெருகி உடலிலுள்ள நீர்க்கோவை தீரும்.
- சிறுகீரைச் சாறு 50 மி.லி , நல்லலெண்ணெய் 50 மி.லி உடன் 100 மி .லி சுண்ணாம்பு தெளிவு நீர் கலந்து காலையில் மட்டும் கொடுத்து வர 10 நாள்களில் சிறுநீருடன் இரத்தம் போவது தீரும்.
- சிறுகீரை வேர், நெருஞ்சில் வேர், சிறுபூளை வேர், சீரகம் வகைக்கு 40 கிராம், அனைத்தையும் 1 லிட்டர் நிரிலிட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 2 பங்காகக் காலை மாலை குடித்து வரக் கல் அடைப்பு தீரும்.
பசலைக் கீரை
- பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது.
- இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.
- முக அழகையும், சருமத்தில் பளபளப்பையும், கவர்ச்சியான நிறத்தையும் பெற பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். பசலைக் கீரையால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலுடன் வெளியாதல், வெள்ளை ஒழுக்கு ஆகியவை நீங்கும். பசலை ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலின் வெப்பத்தைக் குறைக்கக் கூடியது. இக்கீரையை வீக்கம், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வீக்கம் வற்றிவிடும்.
வெந்தையக் கீரை
- வெந்தயக்கீரையைச் சுத்தம் செய்து பொரியல் செய்து உணவில் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் சிறுகச்சிறுக அகன்றுவிடும். இக்கீரை சொறிசிரங்கையும், பார்வைக் கோளாறையும் நீக்கத் துணைபுரியும்.
அகத்திக்கீரை
- இதன் இலைச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து – நீர்க்கோர் வை பிடித்துள்ள குழந்தகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.
- வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீரடைப்பு – பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.