சித்த மருத்துவம்லேகியம்
உடல் வலிமை பெற, உடல் எடை அதிகரிக்க, ஆண்மை பெருக லேகியம்
உடல் வலிமை பெற, உடல் எடையை அதிகரித்து உடல் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் அற்புதமான லேகியம். மேலும் ஆண்மையை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
- அமுக்கிரா – 1/4 கிலோ
- உளுந்து – 50 கிராம்
- எள்ளு – 50 கிராம்
- கருப்பட்டி -1/4 கிலோ
- நெய் – தேவையான அளவு
- தேன் – தேவையான அளவு
செய்முறை
அமுக்கிரா, உளுந்து, எள் மூன்றையும் சூரணம் தனித்தனியாக இடித்து தூளாக்கி சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு கருப்பட்டியை பாகு எடுத்து அதில் சலித்து வைத்துள்ள தூள்களை போட்டு கிளறி அதில் தேவையான அளவு தேன், நெய் சேர்த்து லேகியம் போல் பதத்தில் கிளறி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
இதில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு பிறகு பால் அருந்தவும்.
பயன்கள்
- மெலிந்த உடல் எடை அதிகரித்து நல்ல ஆரோக்கியம் பெறும்.
- உடல் வலிமை பெற்று உறுதி பெறும்.
- விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்