இளமை தரும் தக்காளி
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளியில் ஏராளமான மருத்துவ நன்மைகள் இருக்கின்றன. ஸ்பானிஷ் மொழியில் தக்காளிக்கு மூர் ஆப்பிள் என்று பெயர் இதற்கு ஏழைகளின் ஆப்பிள் என்று பெயர்.
நிறைய சத்துக்கள் நிறைந்தது
தக்காளிப்பழம் நிறைய சத்துக்கள் நிறைந்தது, இது புற்று நோய் வராமல் தடுக்கிறது.தக்காளியில் சுண்ணாம்புச்சத்து ஏராளமாக இருக்கிறது, இது பற்கள் எலும்புகளை உறுதிப்படுத்தும்.
இளமை தரக்கூடியது
தக்காளியில் எ, பி, சி போன்ற உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன. இது ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்கிறது. தக்காளிப்பழம் இளமை தரக்கூடியது. தோலிலும், முகத்திலும் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. மேலும் இது தோல்களை பளபளப்பாக்கும்.
முக அழகுக்கு
பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
2 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் ஓட்மீல், 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.
அளவாக பயன் படுத்தவும்
தக்காளி குளிர்ச்சியானது இதனால் மூட்டு வலி ஏற்படக்கூடும், அப்போது பச்சை தக்காளி சாப்பிடக்கூடாது, சூப் வைத்து சாப்பிடலாம். தினமும் சாப்பிடுவதை தவிர்த்து அவ்வப்போது சாப்பிடலாம்.