உணவே மருந்து

இரத்தத்தை சுத்திகரிக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். உடலில் இரத்தம் சுத்தம் இல்லாமல் இருந்தால் பல நோய்கள் வர அதுவே காரணமாகிவிடும். உடல் அசதி, காய்ச்சல், சுவாச கோளாறு, வயிற்று பொருமல் போன்றவை உண்டாகலாம்.

சில இயற்கை உணவுகளை நாம் எடுத்துக்கொள்வது மூலம் இரத்தத்தை விருத்தி செய்யலாம் அவற்றில் சிலவற்றை காண்போம்.

  • செப்பருத்தி பூவில் இருக்கும் மகரந்தத்தை எடுத்துவிட்டு அந்த இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் உற்பத்தியாகும்.
  • முருங்கை கீரையுடன், துவரம் பருப்பு சேர்த்து சமைத்து அதனுடன் ஒரு முட்டையை கிளறி விட்டு நெய் சேர்த்து சாப்பிட்டு வர இரதம் விருத்தியாகும்.
  • பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உண்டாகும்.
  • இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
  • நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
  • விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.
  • இலந்தைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!