மூலிகைகள்
இன்புறா மருத்துவ பயன்கள்
இன்புறா வெண்மையான மிகச்சிறிய மலர்களையும், சிறிய ஈட்டி வடிவ இலைகளையும் உடைய மிகக் குறுஞ்செடி. தமிழகமெங்கும் தானே வளரக்கூடியது. மழை காலங்களில் எல்லா இடங்களிலும் தழைத்திருக்கும். முழுவதுமே மருத்துவ பயனுடையது.
இன்புறா வேரை யிதமா யருந்தினர்க்குப்
பின்புறா தையமொடு பித்தமுமே – துன்பா
மிருமல் சுவாச மெரிசுரம்வ யிற்றுப்
பொருமலுப்பி சம்பறந்து போம்
குணம்
இன்புறா வேருக்கு கபம், பித்தம், காசம், ஈளை, பித்தசுரம், வயிற்றிரைச்சல், விக்கல் இவைகள் நீங்கும் என்க.
பயன்கள்
- இன்புறா இலைச்சாற்றை சுரத்தினால் வரும் உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் தீரும்.
- இன்புறா, வல்லாரை வகைக்கு 40 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மிலியாக காய்ச்சி 1 அவுன்ஸ் வீதம் காலை மாலையாக கொடுத்து வர சுவாசகாசம், இருமல் குணமாகும்.
- வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து அதில் 10 கிராம் அளவு எடுத்து அதை அரிசி மாவில் கலந்து அடை செய்து காலை, மாலை சாப்பிட கப நோய்கள் அனைத்தும் தீரும்.
- இன்புறா இலைச்சாற்றுடன் பசும்பால் கலந்து சாப்பிட நெஞ்செரிச்சல் குணமாகும்.