இஞ்சியின் மருத்துவ குணங்கள்
மணமுள்ள கிழங்குகளையுடைய சிறு செடி. தமிழகமெங்கும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. உலர்த்திப் பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் சுக்கு எனப்படும்.சுக்கிற்கு மருந்துமில்லை , சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை ” என்பது முதுமொழி.
பயன்கள்
இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு வகைக்கு 30 மி.லி உடன் தேன் 15 மி.லி கலந்து 15 மி.லி அளவாக கொடுத்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் தீரும். வெங்காயச்சாறுக்கு பதிலாக எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்.
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர இருமல், சளி, சுரம், வாத நோய்கள், பேதி முதலியவை குணமாகும்.
தண்ணீரில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர செரியாமை, வயிற்று கோளாறுகள் குணமாகும்.
10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இவற்றை 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராக காட்சி காலை, மாலை குடித்து வர ஆஸ்துமா இரைப்பு, நுரையீரல் சளி அடைப்பு ஆகியவை தீரும்.
முற்றிய இஞ்சியை தோல் நீக்கி அரைத்து பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து இக்கலவைக்குச் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறுதீயில் பதமுறகாய்ச்சி வடித்து ( இஞ்சி தைலம் ) வாரம் இருமுறை தலையிலிட்டுக் குளித்துவர, நீர்க்கோவை, நிர்ப்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் தீரும்.
உள்ளங்கை, கால்களில் அதிகமாக தோல் உரிந்தால் இஞ்சி சாற்றில் வெல்லம் சேர்த்து குடித்து வர தோல் உரியது நிற்கும்.
இஞ்சியுடன் துளசி இலையை சேர்த்து, நசுக்கி நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.
சிறிதளவு இஞ்சியை வெயிலில் காயவைத்து. அதை வெந்நீரில் போட்டு அரைமணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் நீங்கும்.