உணவே மருந்து
நீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு
வெள்ளரிக்காய் கூட்டு சாப்பிட மிகுந்த சுவையாக இருப்பதோடு பல மருத்துவ நன்மைகளையும் நம் உடலுக்கு தருகிறது. இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்..
தேவையானவை
- வெள்ளரிக்காய் – 1 பெரியது
- பாசிப்பருப்பு – 100 கிராம்
- மஞ்சள்தூள் – சிறிதளவு
- சீரகத்தூள் – சிறிதளவு
- வெங்காயம் – 2 பெரியது
- பச்சை மிளகாய் – 3
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய்
- கடுகு
- கருவேப்பிலை
செய்முறை
பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளவேண்டும். பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை தாளித்து அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வெள்ளரிக்காய் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்க வேண்டும். பின்பு வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
பயன்கள்
- உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
- கல் அடைப்பு, நீர்ச்சுருக்கு, நீர் கடுப்பு, உப்பு நீர் ஆகியவற்றை குணமாக்குகிறது.