மூலிகைகள்
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்
வெந்தயக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து மிகுந்தது. உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. கோடைகாலங்களில் நம் உடலுக்கு நிறைய பாதிப்புகள் வரும் அதிலிருந்து விடுபட இதனை பருப்புடன் சேர்த்து சமைத்துண்ணலாம். வெந்தயக்கீரையை நாம் வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்தலாம்.
பொருமன்மந்தம் வாயுகபம் போராடு கின்ற
விரும லருசியிவை யேகுந் – தரையிற்
றீதி லுயர் நமனைச் சீறும் விழியணங்கே!
கோ திலவெந்த யக்கீரை கொள்.
குணம்
வெந்தயக்கீரையால் வயிற்றுப்பிசம், அக்கினி மந்தம், வாத கோபம், காசம், அரோசகம் ஆகிய இவைகள் நீங்கும் என்க.
மருத்துவக் குணங்கள்
- வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்துண்ண வாதநோய் தீரும். உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
- வெந்தயக்கீரையை தண்ணீர் விட்டு அரைத்து களிபோல் கிளறி நெருப்பனலில் காட்டி தாங்கக்கூடிய சூட்டில் கட்டிகளுக்கு வைத்து கட்ட உடைத்துக்கொள்ளும்.
- வாய்ப்புண்களுக்கு வெந்தயக்கீரையை தண்ணீரில் ஊறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் விரைவில் குணமடையும்.
- வெந்தயக்கீரையை வேகவைத்து சிறிது வெண்ணெய் சேர்த்து கடைந்து உட்கொள்ள பித்தத்தால் ஏற்படும் மயக்கம் குணமடையும்.
- ஆட்டு இறைச்சியுடன் வெந்தயக்கீரை, கசகசா, தேங்காய் சேர்த்து சமைத்துண்ண மூல வாயு, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு முதலியவை குணமாகும்.
- வெந்தயக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமிகள் நிறைந்தது. எனவே வாரம் ஒருமுறையாவது இதனை சமைத்து சாப்பிடுவது நல்லது.