முடங்கிக் கிடப்பவர்களை நடக்க வைக்கும் முடக்கத்தான்
இதன் ஆங்கிலப் பெயர் ‘ Cardiospermum Helicacabum ‘ என்பதாகும்.
கொற்றவன் – சமுத்திர தோயம் – முடக்கற்றான் – முடக்கு அறுத்தான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
வறட்சியைத் தாங்கி – வெகு நாட்கள் வாழும். மாற்றடுக்கில் பல்போன்ற அமைப்பில் இலைகளை உடையது. இறகு உள்ள காய்களையும் கொண்டது.
முடக்கத்தான் சமூலத்தை(இலை,காய்,பூ அனைத்தும் ) நன்றாக அரைத்து உள்ளேயும் சாப்பிட்டு – வெளியேயும் பூசி வந்தால் முடக்கு வாதம் தீரும். இது மூக்கில் நீரை பெருக்கி தும்மலுண்டாக்கும் தன்னை கொண்டது.
இலையை அரைத்து சாறு பிழிந்து ரசமாக்கி உணவோடு சாப்பிட்டு வர வாயு – மலச்சிக்கல் தீரும்.
ஒரு பிடி அளவு முடக்கத்தான் இலையை இடித்து சட்டியில் போட்டு 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடி கட்டி சாப்பிட்டு வர நரம்பு சம்மந்தமான் நோய்கள் – மூலம் – கபம் – இருமல் – மேக வாயுப் பிடிப்பி குணமாகும்.
இலையை வதக்கி 5 பூண்டுப்பல்லும் – 10 மிளகையும் தட்டு 1/4 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்ட மலக்கட்டை உடைத்து நன்றாக பேதியாகும். பேதி அதிகமானால் மோரில் எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிட பேதி உடனே நின்று விடும்.
முடக்கு வாத நோயால் அவதிப் படுவர்கள் வாரம் ஒரு முறை 6 மாதம் சாப்பிட்டால் வாதநோய் குணமாகும். சளியும் குறையும்.
இலைளை நெருப்பில் வாட்டி பிழிந்து சாற்றை 2 – 3 துளி காதில் விட்டால் – காது வலி உடனே குணமாகும்.
இலையை அரிசி மாவுடன் கலந்து அடைபோல் செய்து சாப்பிட்டால் உடல் வலி தீரும்.
இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டினால் சிக்கல்பட்டுள்ள உதிரச்சிக்கலை வெளியேற்றும்.
இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டு வீக்கம். கால் பிடிப்பு முதலியவற்றிற்கு வைத்து கட்ட குணமாகும்.
இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்கும்.வேரை இடித்து தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வர மூலநோயை குணமாக்கும்.