முகப் பருவை நீக்கி முகம் பொலிவு பெற
முகத்தில் மருவு, கரும்படை, முகப்பரு, சுருக்கம் இவை நீங்க சோற்று கற்றாழை ஜெல்லில் 1 பாதம் பருப்பை உரசித் தேய்த்து அத்துடன் சந்தனம், மஞ்சள் சேர்த்து இரவு படுக்கப்போகுமுன் முகத்தில் பூசிக்கொண்டு காலையில் கழுவி விடவும். இப்படி 7 நாட்கள் செய்தலே முகம் தெளிவாகும். சுருக்கம் நீங்கும். நிறம் வெண்மையாக்கும்.
கேரட், ஆவாரம்பூ, இரண்டையும் அரைத்து அதில் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் பூசிவந்தால் முகம் பிரகாசமாக இருக்கும். சுருக்கம் நீங்கி அழகைக் கொடுக்கும்.
தினமும் படுக்கைக்குச் செல்லும் முன், முகத்தில் பாதாம் எண்ணெயைத் தடவி, கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் முதுமை நீங்கி இளமை நிலைக்கும். முகத்தில் கரும்புள்ளிகள், கண்ணுக்கடியில் கருநிறத்திட்டு இவை நீங்கும்.
கஸ்தூரி மஞ்சளை விழுது போல் அரைத்து சிறிது வெண்ணெயுடன் குழப்பி முகத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பருக்கள் வராது.
பருக்கள் தோன்றி மறைந்த இடங்களில் பள்ளமாகவோ வடுக்களோ இருந்தால் தினசரி சீனாக்காரத்தை தூள் செய்து வைத்துக் கொண்டு சிறிதளவு வெந்நீரில் கலந்து முகத்தைக் கழுவி துடைக்க சீக்கிரம் மறையும்.
ஆரஞ்சு பழத்தோலின் சாற்றை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்புடன் நல்ல நிறமும் கொடுக்கும்.