அழகு
முகச்சுருக்கம் நீங்க
மனிதர்களுக்கு வயதாகும் போது தோல் சுருக்கம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று ஆனால் சிலருக்கு இளம் வயதிலே தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை அளிக்கும். அவர்களுக்கு இயற்கை முறையில் சில வழிமுறைகளை பின்பற்றினால் தோல் சுருக்கத்தை நீக்கலாம்.
- 50 மிலி பாலை நன்றாக காய்ச்சி அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து ஒரு மணி நேரம் கழித்து இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி காலையில் குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். இது போல் தொடர்ந்து 10 நாட்கள் செய்து வர முக சுருக்கம் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.
- கசகசாவை பால் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் பிறகு முட்டையின் வெள்ளை கருவை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது போல் குறைந்தது ஒரு வாரமாவது செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.
- கடலை மாவு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் நன்றாக தடவி முகம் இறுக்கமாக வரை வைத்திருந்து பிறகு கழுவிவிடவும். இதுபோல் தொடர்ந்து செய்து வர முகத்தோல் சுருக்கம் நீங்கி முகம் பளபளக்கும்.
- பப்பாளி பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் நீங்கும்.
- ஆவாரம்பூவை பொடிசெய்து அதனுடன் கடலைமாவு சேர்த்து பாலில் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவி வர முகத்தோல் சுருக்கம் நீக்கும்.
உணவு முறைகள்
முளைகட்டிய தானியங்கள், பருப்புவகைகள், காரட் போன்றவை அதிகளவு எடுத்துக்கொண்டால் தோல் சுருக்கத்தை தள்ளிப்போடலாம்.