மூலிகைகள்

ரோஜா பூவின் மருத்துவ பயன்கள்

இதன் ஆங்கிலப் பெயர் Rosa Gallica என்பதாகும்.

தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது. இளஞ்சிவப்பு நிற – நறுமண மலரையும் கொண்ட கூரிய வலைந்த முள் நிறைந்த நேராக வளரும் குறுஞ்செடி. மலர்கள் மருத்துவ பயன்கள் உள்ளவை.

1582-1612 ஆம் வருட மத்தியில் மொகலாய சக்கரவர்த்திகள் காலத்தில் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பட்டு வந்தன இதற்கு ‘சென்ட்’ என்று கூறினர்.

பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு வாய் கொப்பளிக்க வாய்ப்புன் ஆறும் புண்களை கழுவி வர சதை வளர்ச்சி குறைந்து புண்கள் ஆறும்.

பூவுடன் சீனா கற்கண்டு சேர்த்து சிறிது தேன் கலந்து பிசைந்து ஒரு வாரம் வெளியில் வைக்க குல் கந்து ஆகும். காலை – மாலை சாப்பிட்டு வர மலச்சிக்கள் – உதிர பேதி – வெள்ளை – வெட்டை தீரும் . தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் – கல்லீரல் – இதயம் – இரைப்பை – சிறு நீரகம் – குடல் ஆகியவற்றிற்கு பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியமாகும்.

பாலில் ரோஜாப்பூ இதழ்களை போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால் சளி நீங்கும். ரத்தம் விருத்தி அடையும்.

ரோஜா மொக்கு – நில வாகை – சுக்கு – கிராம்பு ஆகியவை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பெரியவர்களுக்கு ஒரு அவுன்ஸ் – சிறுவர்களுக்கு அரை அவுன்ஸ் குழந்தைகளுக்கு கால் அவுன்ஸ் கொடுத்தால் நன்கு பேதியாகும். ஞாபக சக்தி உண்டாகும்.

மலர்ந்த ரோஜா பூக்களின் இதழ்களை படிக பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் வாலையில் இட்டு முறைப்படி தீநீர் வாங்குவதே அசல் பன்னீர் ஆகும். ஆயிரம் பூக்களுக்கு அரைலிட்டர் பன்னீர் கிடைக்கும். ஒரு லட்சம் பூக்களைப் போட்டு எடுக்க சுத்தமான அத்தர் கிடைக்கும். உள்ளே சாப்பிட உடல் குளிர்ச்சி அடையும். மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். இனிப்பு பலகாரங்களில் தெளிக்க காப்பிடுவதற்கு இனிமையாக இருக்கும்.

Show More

One Comment

  1. Very truth. By experience. All your 5000+ friends & other face book followers must save this & get benefitted. THANKS.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 6 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!