பொடுகு தொல்லை இனிமேல் இல்லை
கூந்தலின் அழகைக் கெடுப்பதிலும் முடி கொட்டுவதிலும் பொடுகு முக்கிய பங்கு வகிக்கிறது. சிலருக்கு தலைப்பகுதிகளில் சிறு சிறு வெண்மையான செதில்கள் உதிரும் இதைத்தான் பொடுகு என்கிறோம்.
தலையின் தோல் பகுதியில் என்னும் சுரப்பி உண்டு. அது சுரக்கும் பொருளுக்கு சீபம் என்று பெயர். இது குறைவாக சுரப்பது, சீதோஷ்ண நிலை மாறுதல் உணவு கட்டுப்பாடின்மை மற்றும் கூந்தலை பராமரிக்காமல் இருப்பது ஆகியவையே பொடுகுக்கான காரணங்கள்.
மருத்துவ முறைகள்
பொடுதலைசாற்றில் சமமாக நல்லெண்ணெய் கலந்து காட்சி வடித்து வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை தீரும்.
நாட்டு மருந்து கடைகளில் கோஷ்டம் என்னும் ஒரு வேர் கிடைக்கும். இதை வாங்கி தூள் செய்து வெண்ணையில் குழப்பி தலையில் தேய்த்து குளிக்கலாம்.
பசலை கீரையை அரைத்து தேய்த்து 3 நாட்கள் தொடர்ந்து குளித்து வர பொடுகு விலகும்.
வெண்மிளகை பால் விட்டு அரைத்து குழம்பு போலாக்கி அதை தலைக்கு தேய்த்து சிறிது ஊற வைத்து குளிக்கவும். வசம்பை தட்டி தேங்காய் எண்ணையில் ஊற போட்டு, அந்த எண்ணையை தடவி வர பொடுகு தீரும்.
நல்லெண்ணையில் சிறிது வேப்பம்பூ, வெல்லம், சேர்த்து காட்சி தலைக்கு பூசி வர பொடுகு தொல்லை நீங்கும்.
மயிர்மாணிக்கம் என்னும் மூலிகை கைப்பிடியளவு எடுத்து அதில் வேம்பாடம் பட்டை 5 கிராம் போட்டு நன்றாக அரைத்து 100 மிலி நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி பதத்தில் வடித்து பூசி வர பொடுகு போகும்.
தேங்காய்ப்பால் 1/2 கப், எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து தேய்த்து குளித்து வர பொடுகு விரைவில் மறையும்.
சத்து குறைவால் பொடுகு வருவதும் ஒரு காரணம் எனவே காய்கறிகள் பழங்கள், முழு தானியங்கள், நெய், தேங்காய், எள் சட்னி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.