அதி இரத்தப்போக்கு என்னும் பெரும்பாடு பிரச்சனைக்கு தீர்வு
அதி இரத்தப்போக்கு என்னும் பெரும்பாட்டிற்கு கீழாநெல்லி வேர், அசோகமரப்பட்டை சமமாக உலர்த்தி இடித்துப் பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு 1 தேக்கரண்டி காலை மாலை வெந்நீருடன் சாப்பிட்டு வர பெரும்பாடு மற்றும் மாதவிலக்கு தாமதமாகவோ, அடிக்கடியோ போகும் கருப்பை ரோகம் குணமாகும். மேலும் சுத்தமான பருத்தித் துணியை சுட்டுச் சாம்பலாக்கி அதை நீருடன் கலந்து ” பேஸ்ட் ” போல் செய்து சிறிது சீரகம் சிறிது பனைவெல்லம் கலந்து மூன்று வேளையும் சாப்பிட பெரும்பாடு என்னும் அதிரத்தப் போக்கு குணமாகும்.
அசோகு மரப்பட்டை 40 கிராம், மாதுளைவேர்பட்டை 20 கிராம் பச்சையாகச் சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 1 நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி லி வீதம் 3, 4 வேளையாகத் தினமும் சாப்பிட்டு வர 1 வாரத்தில் எவ்வளவு நாள்பட்ட பெரும்பாடுத் தீரும். கரம், புளி நீக்கி உணவு கொள்ள வேண்டும்.
இலந்தைப்பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து 125 மி லி ஆக்கி 4 வேளை தினமும் குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டையைச் சேர்த்து குடிநீர் செய்துக் காலை, மதியம், மாலை குடித்து வர தீராத பெரும்பாடுத் தீரும்.
செம்பரத்தை வேர்ப்பட்டை, இலந்தைவேர்ப்பட்டை, மாதுளம் பட்டை சமனளவு சூரணம் செய்து 4 சிட்டிகைக் காலை, மாலை சாப்பிடப் பெரும்பாடுத் தீரும்.
வில்வ இலையை மையாய் அரைத்துத் கொட்டைப் பாக்களவு கொடுத்துத் குளிர் நீரில் குளித்து வர குணமாகும்.
ஓதியம்பட்டைக் குடிநீர் 30 மி லி காலை மாலை சாப்பிடப் பெரும்பாடு தீரும்.
மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட பெரும்பாடுத் தீரும். விளாம்பிசின் உலர்த்தித் தூள் செய்து காலை மாலை 1 சிட்டிகை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட குணமாகும்.