உணவே மருந்து
பிரண்டை துவையல் செய்முறை
தேவையானவை
- பிரண்டை
- நல்லெண்ணைய்
- மிளகாய்
- வெங்காயம்
- தக்காளி
- பூண்டு
- உப்பு
செய்முறை
பிரண்டையின் துளிர் பகுதிகள் முதல் மூன்று கணுக்களுடன் எடுத்து கணுவை நீக்கி சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் சட்டியை வைத்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு நல்லெண்ணெய் ஊற்றி தக்காளி, வெங்காயம,; பூண்டு, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பிறகு வதக்கி வைத்த பிரண்டையுடன் சேர்த்து அரைக்கவும்.
சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மருத்துவ பயன்கள்
- குடற் பூச்சிகளை நீக்கி, குடற் புண்ணை குணமாக்கும்.
- மலச்சிக்கலை போக்கும்.
- மூட்டு வலிகளுக்கும், பக்க வாத நோய்களுக்கும் உணவாகவும் பயன்படுகிறது.
- பிரண்டைத் துவையல் செறியாமையை நீக்கி பசியைத்தூண்டும்.
- குழந்தைகளும், பெரியவர்களும் உணவில் சேர்த்துக் கொள்வதால் எலும்புகளும், நரம்புகளும் பலப்படுகிறது.