உணவே மருந்து
நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் பாகற்காய் குழம்பு
பாகற்காய் பல மருத்துவ குணங்களை கொண்ட காய் கசப்பாக இருந்தாலும் பாகற்காய் குழம்பு சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்
தேவையானவை
- நறுக்கிய பாகற்காய் – 1 கப்
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 2
- புளி – 1 எலுமிச்சை பழ அளவு
- மிளகாய் தூள்
- மல்லித்தூள்
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- வெந்தயம்
- கறிவேப்பிலை
பாகற்காய் குழம்பு செய்முறை
நறுக்கிய பாகற்காயை சிறிது உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவைத்து பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விடவேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, பாகற்காய், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கி புளிச்சாறு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
பயன்கள்
- நோய் எதிப்பு சக்தியை அளிக்கிறது.
- மலச்சிக்கலை போக்கி ஜீரண சக்தியை அளிக்கிறது.
- புற்று நோய் உருவாக்கும் அணுக்களை அழிக்கிறது.
- தோல் நோய்களை போக்குகிறது.
- நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது.