மூலிகைகள்

கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி, ஆஸ்துமா, வாதம் போன்ற கோளாறுகளை நீக்கும் நொச்சி

நொச்சி சிறுமர வகையை சார்ந்தது. 3 அல்லது 5 கூட்டிலைகளை எதிரடுக்கில் பெற்ற சிறுமரம். இதன் இலைகள் வெகுட்டல் மனமுடையது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. பட்டை, இலைகள் ஆகியவை கருப்பு நிறமாக இருந்தால் கருநொச்சி என்ற இனமாகும்.

நாசந் தருவாத நாசிப் பிணியழல்க
வாசந் தசனவுரு வன்றோடங் – காசமற
லுச்சி யடையை யுறைநோயு மென்படுமோ
நொச்சி யடையை நுவல்

குணம்

இதன் முக்கிய குணம் சிறு நீர் பெருக்குதல், நோய்கள் நீக்கி உடல் நலம் பேணுதல், மாதவிலக்கு தூண்டுதல், நுண் புழுக்களை கொல்லுதல் ஆகிய குணமுடையது.

பயன்கள்

  • இதன் இலையை தலையணையாக வைத்து பயன்படுத்த தாங்க முடியாத தலைவலி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு ஆகியவை தீரும்.
  • நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு 1 பிடி எடுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சூடு செய்த செங்கலை போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் தீரும்.
  • 2 நொச்சி இலை, 4 மிளகு, 4 பூண்டுப்பல், 1 லவங்கம் வாயில் போட்டு மென்று சுவைத்து சாரத்தை மெதுவாக விழுங்கினால் ஆஸ்துமா மூச்சுத்திணறல் தீரும். தொடர்ந்து இதுபோன்று செய்து வந்தால் ஆஸ்துமா தீரும்.
  • நொச்சி, நுணா, வேம்பு, பொடுதலை வகைக்கு 1 பிடி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 4 மிளகு, 1 டீஸ்பூன் சீரகமும் சேர்த்து கால் லிட்டராக காய்ச்சி 30 மி.லி வீதம் 3 நாட்கள் கொடுக்க மாந்தம் தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!