உணவே மருந்து

உணவை நொறுங்கத்தின்று நூறாண்டு வாழ்வது எப்படி?

  • உலகத்தில் வாழும் மனிதர்களில் அதிகம் பேர் உணவினை சாப்பிடும் போது அவசரமாகவும், அரைகுறையாகவும் மென்று விழுங்கி விடுவதால் உணவின் முழுப்பலனையும் உடல் அடையமுடியாமல் போய்விடுகிறது.
  • ஏன் என்றால் வாயில் உணவுடன் கலக்க வேண்டிய உமிழ்நீர் எனப்படும் நாவின் சாரம் போதுமான அளவு உணவோடு கலக்காமல் உணவு விழுங்கப்பட்டு விடுகிறது. இதனால் உணவின் முழுசக்தியையும் பெறும் வாய்ப்பினை உடல் இழந்து விடுகின்றன.
  • நாவின் சாரம் உணவுடனோ, மருந்து வகைகளுடனோ வேண்டிய அளவு கலக்கப்பெற்று வயிற்றினுள் சென்றால்தான் உணவு, மருந்தின் முழுப்பயனை உடலுக்கு அளிக்கும்.
  • இது போன்று உணவு வகைகள் மட்டுமின்றி மருந்து வகைகளையும் நாவினால் சகித்துக்கொண்டு சுவைத்து நிதானமாக விழுங்க வேண்டும். இவ்வாறு உட்கொள்வதால் மருந்தின் முழுப்பலனையும் அடைய முடிகிறது. இது அனுபவத்தில் அறிந்த உண்மையாகும்.
  • ஆகவே ” நொறுங்கத்தின்றால் நூறு வயது வாழலாம்” என்ற பழமொழி உண்மையாவதை அனுபவத்தில் அறியலாம்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!