உடல் நலம்
நீரிழிவு நோய் வரும் முன்பு காணப்படும் அறிகுறிகள்
மனிதனுக்கு தோன்றக்கூடிய நோய்களிலே மிகக்கொடியது நீரிழிவு நோயாகும். கொஞ்சம் கொஞ்சமாக உயிரை உறிஞ்சுவதுமான நோய். இது பரம்பரையாகவும் சிலருக்கு இளம் வயதிலே தோன்றக்கூடியது. இந்நோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
அறிகுறிகள்
- நாளுக்குநாள் உடல் மெலிவுறும், சருமம் வெளுத்து காணப்படும்.
- கைகால்களில் சூடு உண்டாகி லேசாகக் காந்தல் அடிக்கும்.
- தாகம் மிகுதியாகி நாக்கு உதடுகளில் வறட்சி உண்டாகும்.
- நாளுக்குநாள் உண்ணும் உணவின் அளவு குறையும்.
- சோம்பல் மிகுதியாகி இரவு பகலும் தூக்கம் உண்டாகும்.
- வாயானது எப்போதும் புளிப்புச் சுவையுடனிருக்கும்.
- கண்ணின் பார்வை கொஞ்சம் மங்களாகும்.
- சருமத்தில் சாம்பல் பூத்து வெடித்துச் சொறி ஏற்படும்.
- பல்லீறுகளிலிருந்து அடிக்கடி இரத்தம் கசியும், பல்லீறுகள் பலமற்றுப் பற்கள் விழ ஆரம்பிக்கும்.
- சிறுநீர் கழியுங்கால் நீர்த்தாரையின் வழியிலும் குறியின் நுனிச் சதையிலும் லேசாக வலியும் பசபசவென அரிப்பும் இருக்கும்.
- சீறுநீர் கழிந்த இடத்தில் சிறுநீரில் வெண்ணிற நுரைகள் தோன்றும்.
- நாவரட்சியுடன் வாயிலிருந்து துர் நாற்றம் அடிக்கும்.